பாகிஸ்தானில் ஒரேநாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி

#SriLanka #Death #world_news #Pakistan #Lanka4 #Dengue
Kanimoli
2 years ago
பாகிஸ்தானில் ஒரேநாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி

பாகிஸ்தானில் கொசுக்கடி காரணமாக உண்டாகும் டெங்கு நோய் பாதிப்பு உயர்ந்து வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களான ராவல்பிண்டி, முல்தான், பைசாலாபாத், குஜ்ரன்வாலாவில் டெங்கு பாதிப்பு நோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள்.

 லாகூரில் மட்டும் இந்தாண்டு இதுவரை 1,511 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகினர். பாகிஸ்தானில் நேற்று ஒருநாள் மட்டும் புதிதாக 159 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இந்தாண்டு 3 ஆயிரத்து 849 ஆக உயர்ந்தது.

 நேற்று காலை நிலவரப்படி 151 பேர் டெங்கு மீட்பு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ராவல்பிண்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 70 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4